சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் தமிழக வீரர்கள் முன்னிலை

சென்னை, அன்னை அருள் பப்ளிக் பள்ளி சார்பில், முதலாவது சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டி, மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.

போட்டிகளில், சண்டிகர், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், புதுச்சேரி, ஒடிஷா, அந்தமான், கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 435 பேர் ஆர்முடன் பங்கேற்று வருகின்றனர்.

ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. ரேட்டிங் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நேற்று நடந்த நான்கு சுற்று போட்டிகள் முடிவில், புதுச்சேரி வீரர் உமாசங்கர், தமிழகத்தின் அஜிஸ், ஆயுஷ் ரவிகுமார், ரூத்ரபோர்ட், கார்த்திகேயன், ஹிரன், வெங்கடகிருஷ்ணன், சரவணன், பிரிதீக் ஷா, வினோ வர்ஷன், ராம்குமார், சீனிவாசன், சுப்ரமணியன் உள்ளிட்ட 13 வீரர், வீராங்கனையர் முன்னிலையில் உள்ளனர். போட்டிகள் தொடர்கின்றன.

Advertisement