தோள்பட்டை ஜவ்வு விலகலுக்கு ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பை சேர்ந்த கல்லுாரி மாணவர் காளீஸ்வரன் 20, இவருக்கு 4ஆண்டுகளுக்கு முன்பு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதில் அவருக்கு தோள்பட்டையில் ஜவ்வு விலகல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து எலும்பு முறிவு டாக்டர் அருண் சிவராம், மயக்க மருந்து டாக்டர் ராம் பிரகாஷ், மருத்துவ குழுவினர் அவருக்கு தோள்பட்டையில் நவீன நுண்துளை அறுவை சிகிச்சையான ஆர்த்ரோஸ்கோபி எனப்படும் சவ்வு மறுசீரமைத்தல் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது காளீஸ்வரன் நலமுடன் உள்ளார்.
இது குறித்து டாக்டர் அருண் சிவராம் கூறுகையில், ஆர்த்தோஸ்கோபி நவீன நுண்துளை அறுவை சிகிச்சை பொதுவாக நகரங்களில் உள்ள மருத்துவகல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தற்போது முதல்முறையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்ளது, என்றார்.