நுாதனமாக மொபைல் போன்கள் திருடிய இரு வாலிபர்கள் கைது

சென்னை,:உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்கோலியா, 28; கிரேஷ் ஆப்பரேட்டர். கடந்த, 9ம் தேதி காலை திருவள்ளூக்கு வேலைக்கு செல்வதற்காக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய மின்துாக்கி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர், 'மொபைல் போன் வழியே டிக்கெட் எடுத்து தருகிறேன்' என்று கூறி, அவரது மொபைல்போனை வாங்கி தப்பினார்.
பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்தயாள் லக்காரா, 30, என்பவரை கைது செய்தனர்.
மூன்று மாதங்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியரிடம் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி மொபைல்போனை பறித்துச் சென்றதும், திருவல்லிக்கேணியில் மொபைல் போன் கடை நடத்தி வரும் நவ்சாத் அலி என்பவரிடம் விற்று, பணம் பெற்றதும் தெரிய வந்தது.
இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 22 மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
கைதான ராம்தயாள் லக்காரா மீது, ஏற்கனவே இரு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.