பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்கள் : கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி:மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 77 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 1,591 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இந்த மாணவர்களுக்கு உடனடித் தேர்வுகள் வரும் ஜூன் 25 முதல் ஜூலை 2ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கு விண்ணப்பிக்க வரும், 29ம் தேதி கடைசி நாள். தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் வகையில் அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே அந்தந்த பாட ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வரும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் நடக்கும் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement