செல்லாண்டியம்மன் கோவில் வைகாசி திருவிழா துவக்கம்

மோகனுார், மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா, நேற்று கா


லை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வரும், 28ல் சுவாமி துாக்குத்தேரில் எழுந்தருளி, எஸ்.வாழவந்தியில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, மாவிளக்கு பூஜை செய்யப்பட்டு, எல்லை ஓடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, துாக்கு தேரில் எழுந்தருளும் சுவாமிக்கு, சின்னகரசபாளையம், பெரியகரசபாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம், முத்துார், ஆண்டிபாளையம், வடக்கு
தீர்த்தம்பாளையம்.
மோளக்கவுண்டனுார், குட்லாம்பாறை, கே.ஐயம்பாளையம், நொச்சிப்பட்டி, கே.புதுப்பாளையம், அக்ரயாம்பாளையம், கே.புளியம்பட்டி, வள்ளியம்பட்டி, வள்ளியம்பட்டிபுதுார் என, 18 கிராமங்களுக்கும் சென்று பூஜை செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

Advertisement