வனப்பகுதியில் வாலிபர் மர்ம சாவு

சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், கடமலம்பட்டியை சேர்ந்தவர் விமல், 23; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை வனப்பகுதி காப்பு காட்டின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக, செம்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து செம்மேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement