தொழில் உரிமை கட்டணம் குறைக்க கோரிக்கை

நடுவீரப்பட்டு : நெல்லிக்குப்பத்தில் தொழில் உரிமை கட்டணத்தை குறைக்க நகர தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகர தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சம்சுதீன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஆசாத் ஆகியோர் நகராட்சி கமிஷனரிடம் அளித்த மனு:

தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ள தொழில் உரிமை கட்டணத்தை குறைத்து கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த அதே தொகையை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தொழில் உரிமை கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் நடைமுறையை ரத்து செய்து, மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement