பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

பக்சார்: நிலப்பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது; பக்சார் மாவட்டம் அஹியாபூர் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே நிலம் மற்றும் மணல் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. அப்போது, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விரேந்திர யாதவ், வினோத் சிங் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், எனக் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
ஆயுதப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு
-
சத்தமாக பாட்டு கேட்ட கணவரை கண்டித்த மனைவி மீது ஆசிட் வீச்சு
-
உலக அழகி போட்டியில் வெளியேறிய பிரிட்டன் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு
-
மரத்தின் கீழே துாங்கியவர் மீது சேற்றை கொட்டியதால் உயிரிழப்பு
-
கொரோனா பரவல் அதிகரிப்பு: மருத்துவமனைகளுக்கு உஷார்
-
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை