இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

நாட்டிங்காம்: நாட்டிங்காம் டெஸ்டில் அசத்திய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ், 45 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்து சென்ற ஜிம்பாப்வே அணி, ஒரே ஒரு டெஸ்டில் (4 நாள் ஆட்டம்) விளையாடியது. நாட்டிங்காமில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 565/6 ('டிக்ளேர்') ரன் குவித்தது. முதல் இன்னிங்சில் 265 ரன்னுக்கு சுருண்ட ஜிம்பாப்வே அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 30/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்ஸ் (88), சிக்கந்தர் ராஜா (60) அரைசதம் கடந்தனர். வெஸ்லி (31) ஆறுதல் தந்தார். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 255 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் பஷீர் 6 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை பஷீர் வென்றார்.

Advertisement