தமிழகம், கேரளாவில் கோவிட் பாதிப்பு: மத்திய அரசு தகவல்!

1

புதுடில்லி: '' தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே கோவிட் பாதிப்பு பதிவாகிறது,'' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தென் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.


இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: கோவிட் பரவல் அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் கோவிட் பாதிப்பு பதிவாகிறது. அதிலும், லேசான பாதிப்புடன், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கண்காணிப்புடன் இருப்பதுடன், பல்வேறு அமைப்புகள் மூலம் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement