சிட்கோ வளாகத்தில் 25 கடைகள் அகற்றம்

கிண்டி :அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி தொழிற்பேட்டை வளாகம், 407 ஏக்கர் பரப்பு உடையது.

இந்த வளாகத்தில் வெளி வாகனங்களை நிறுத்த, சாலையோர கடைகள் நடத்த, சிட்கோ நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கட்டண அடிப்படையில் அமைக்கப்பட்டு வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தாமல், தொழில் நிறுவனங்களின் வாசல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால் நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்தன.

இதையடுத்து, 25க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அகற்ற, நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதையும் மீறி கடை நடத்தப்பட்டதால், சிட்கோ நிர்வாகம், போலீஸ் பாதுகாப்புடன் 25 கடைகளையும் நேற்று அகற்றியது.

மேலும், தடையை மீறி நிறுத்திய மற்றும் அதிக நாட்கள் ஒரே இடத்தில் கேட்பாரற்று நின்ற தனியார் பேருந்து, கார், டெம்போ உள்ளிட்ட 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement