டீ கடைக்காரரை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது

அயனாவரம், :அயனாவரம், பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 56. இவர், அதே பகுதியில் உள்ள கொன்னுார் நெடுஞ்சாலையில், டீ கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, இவரது டீ கடைக்கு வந்த இருவர், டீ குடித்துவிட்டு சிகரெட் வாங்கி புகைத்துள்ளனர். பின், பணம் கொடுக்காமல் சென்றதால், நாராயணன் தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த இருவரும், 'எங்களிடமே பணம் கேட்கிறாயா... நாங்கள் ரவுடி' எனக் கூறி, நாராயணனை சரமாரியாக தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரித்து, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, அயனாவரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராகவேந்திரன், 22, தனுஷ், 19, ஆகிய இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement