ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே, ஊராட்சி செயலாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் அடுத்த சாத்தனுாரில் ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் முருகேசன் மகன் மாரிமுத்து,40; சாத்தனுாரில், 15வது மத்திய நிதிக்குழு வடிகால் வாரியம் தனிநபர் குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது.

நேற்று முன்தினம், இந்த பணியை மாரிமுத்து மேற்பார்வை செய்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மகன் சீனுவாசன்,46; என்பவர் அவரது வீட்டிற்கு, இரு குழாய்களை அமைக்க சொன்னார். இதற்கு மாரிமுத்து மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், மாரிமுத்துவை திட்டி தாக்கி, பணி செய்ய விடாமல் தடுத்தார்.

இது குறித்து தியாகதுருகம் பி.டி.ஓ., கொளஞ்சிவேலு அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, சீனுவாசனை கைது செய்தனர்.

Advertisement