இலவச இதய பரிசோதனை முகாம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் இலவச இதய பரிசோதனை முகாம் நடந்தது.

ரோட்டரி சங்கம் காவேரி மருத்துவமனை, முதல்வர் மருந்தகம் ஆகியோர் இணைந்து நடத்திய முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ரோட்டரிமுதன்மை துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் முத்துவேல் வரவேற்றார். முன்னாள் நகராட்சி முன்னாள் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிச்சாமி திறந்து வைத்தனர்.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மாதேஸ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மக்களுக்கு ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதய பாதுகாப்பு ஊர்தி மூலம் இசிஜி ., எக்கோ, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சர்க்கரை பரிசோதனை, பி.எம்.ஐ., உள்ளிட்ட உயர் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement