கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு

பெருங்களத்துார், பழைய பெருங்களத்துார், குறிஞ்சி நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணறு, அதே பகுதியில் உள்ளது.

நேற்று, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய், அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, நாயை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து, தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு துறையினர் வந்து, 50 அடி கிணற்றுக்குள் இறங்கி, ஒரு மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டனர். வாயில்லா ஜீவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு, அப்பகுதிவாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement