தமிழக அரசின் தலைமை ஹாஜி காலமானார்

சென்னை,:தமிழக அரசின் தலைமை ஹாஜி சாலாவுதீன் முகமது அயூபக் சாகிப், நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.

தமிழக அரசின் தலைமை ஹாஜி சாலாவுதீன் முகமது அயூபக் சாகிப், 84. இவர், நேற்று வயது மூப்பின் காரணமாக காலாமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமை ஹாஜியாக இருந்தவர்.

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., - பி.எச்.டி., பட்டங்களை பெற்ற இவர், ஹாஜியாக நியமிக்கப்படுவதற்கு முன் சென்னை நியூ கல்லுாரியில் அரபுப் பேராசிரியராக இருந்தார்.

தமிழகத்தில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை தலைமை ஹாஜியான இவரே அறிவிப்பார். அவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட இரங்கல் அறிக்கையில், 'ஹாஜியின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியான அவர், தன் சமூக சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement