ப.வேலுார் சுல்தான்பேட்டை வாரச்சந்தையில் சுங்க கட்டண வசூலிப்புக்கு அறிவிப்பு பலகை
ப.வேலுார் :ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில் சுல்தான்பேட்டை வாரச்சந்தையில், சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட சுல்தான்பேட்டையில், ஞாயிறு தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தை ஏலம் எடுத்த நபர்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக, கடந்த, 6ல் இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், டவுன் பஞ்., நிர்வாகத்திடம், கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில் வாரச்சந்தை மைதானத்தில் சுங்க வரி கட்டணம் வசூலிக்கும் தொகை குறித்து விளம்பர பலகை வைத்துள்ளனர். இதில், கோழிகளுக்கு, 15 ரூபாய், ஆடுகளுக்கு, 30 ரூபாய், விற்பனைக்கு சைக்கிளில் கொண்டு வர மூட்டைக்கு, 60 ரூபாய், மளிகை கடைக்கு, 70 ரூபாய், துணி கடைக்கு, 100 ரூபாய், காய்கறி கடைக்கு, 100 ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில் விளம்பர பலகை வைத்துள்ளனர். இதற்குரிய கட்டணம் மற்றும் அதற்குரிய ரசீதை விவசாயிகள், வியாபாரிகள் தர வேண்டுமென டவுன் பஞ்., நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:
சைக்கிளில் கொண்டுவரும் கீரை வகைகளுக்கு, 60 ரூபாய் கட்டணம் என்பது மிக அதிகமாக உள்ளது. ஏனென்றால், கொண்டு வரும் கீரைகளை விற்பனை செய்தாலே, 200 ரூபாயை தாண்டாது. அதனால், சைக்கிளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை, 10 ரூபாயாக குறைக்க வேண்டும். அதேபோல், ஆடு, கோழி கொண்டு வரும் விவசாயிகளுக்கு, பழைய கட்டணமான, ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். விவசாயிகள், வியாபாரிகளிடம் வசூல் செய்யும் கட்டணத்துக்குரிய ரசீது வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று வாரச்சந்தை கூடும் நிலையில், சுங்க வரி கட்டண பலகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்