விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் 2 பேருக்கு 'காப்பு'
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, செம்பாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகம், 46; இவரது மனைவி ராஜலட்சுமி, 42; தம்பதியர் மகள் ராஜேஸ்வரி, 24; இவர்கள் மூவரும், கடந்த, 22 மாலை, 3:00 மணிக்கு, டூவீலரில் திருச்செங்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர். வட்டூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.எம்.பி.எஸ்., மற்றும் எம்.ஆர்.என்., ஆகிய இரு தனியார் பஸ்கள், போட்டி
போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்திக் கொண்டு சென்றது. அப்போது, எம்.ஆர்.என்., பஸ் எதிரே சாலை ஓரத்தில் வந்துகொண்டிருந்த சண்முகத்தின் டூவீலர் மீது மோதியது.
இதில், சண்முகம், ராஜலட்சுமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் ராஜேஸ்வரி படுகாயமடைந்தார். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீசார், நேற்று மாலை, எம்.ஆர்.என்., பஸ் டிரைவரான, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த வீரமணி மகன் முகில், 24, எஸ்.எம்.பி.எஸ்., பஸ் டிரைவரான, சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ், 25, ஆகியோரை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்