சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு



கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம், கிராம புறங்களில், 3 லட்சம் ரூபாய், நகர்புறங்களில், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், வருமானமுள்ள நபர்களுக்கு, தனிநபர் கடனாக, 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், சுய உதவிக்குழு நபர் ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் கடன் பெற, கிருஷ்ணகிரி மாவட்

ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களை அணுகலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement