பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

ஊத்தங்கரை :ஊத்தங்கரையிலுள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புச்செழியன் ஆகியோர், 200க்கும் மேற்பட்ட பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.


அதில், சிறு குறைகள் இருந்த, 27 பஸ்களை சரிசெய்து மீண்டும் காண்பித்த பிறகு தான், இயக்க வேண்டும் என கூறினார். பஸ்களில் முறையான முதலுதவி பெட்டி, எமர்ஜென்சி வழி, பிரேக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்களை, வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புச்செழியன் ஆய்வு செய்து டிரைவர்களுக்கு, பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

Advertisement