உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்தவருக்கு 'கும்மாங்குத்து'
திருச்சி:திருச்சி அருகே உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி, 20,000 ரூபாய் பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள மூவராயன்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் ஆனந்தன். அண்மையில், இவரது கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எனக்கூறி மூன்று பேர் வந்துள்ளனர்.
ஹான்ஸ் விற்பதை காரணம் காட்டி, அபராதமாக, 20,000 ரூபாயை வாங்கிக் கொண்டு, வெள்ளைத்தாளில் கையால் எழுதிய ரசீது கொடுத்து சென்றனர். சந்தேகமடைந்த ஆனந்தன், அவர்களின் போட்டோவை வாட்ஸாப் குரூப்களில் பகிர்ந்தார்.
இந்நிலையில், ஆனந்தனை ஏமாற்றிய நபர், குருவம்பட்டி மதுபானக் கடையில் நிற்பதாக, நேற்று காலை தகவல் கிடைத்தது.
தன் நண்பர்களுடன் அங்கு சென்ற ஆனந்தன், அந்நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, மண்ணச்சநல்லுார் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில், அவர், முசிறி அருகே கண்ணுக்குளத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், 32, என, தெரியவந்தது.
இவர், தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து, பல இடங்களில், இதுபோல மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், வெங்கடாசலத்தை கைது செய்து, இருவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்