அபாய நிலையில் மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்

ஜமீன்கொரட்டூர்:பூந்தமல்லி ஒன்றியம் திருமழிசை அருகே ஜமீன் கொரட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பல்வேறு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், அச்சத்துடன் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
Advertisement
Advertisement