நெடுஞ்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை 16 கி.மீ., துாரம் உடையது.

இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரத்தில், சாலை பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement