அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இடையூறால் 21 பேர் கைது
குமாரபாளையம் மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து, சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில், குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
அதில், காவிரி ஆறு நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதை, மாசு கட்டுப்பாடு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது என, கோஷம் எழுப்பினர். இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, ஒன்பது பெண்கள் உள்பட, 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement