பஸ் - வேன் மோதலில் பலி 7 ஆக உயர்வு

தஞ்சாவூர்:கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, வேளாங்கண்ணிக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த, 12 பேர், 'டெம்போ டிராவலர்' வேனில், மே 21ம் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், அரசு பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலும், சிகிச்சையில் இருவர் என, ஆறு பேர் இறந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி, 7, என்ற சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. மேலும், ஐவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement