டிரினிடி மகளிர் கலை கல்லுாரி மாணவியர் 292 பேர் 'புதுமைப்பெண்' திட்டத்தில் பயன்

நாமக்கல் :தமிழக அரசு சார்பில், மகளிர் உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில், 6 முதல், பிளஸ் 2 வரை, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்று, தொடர்ந்து அவர்கள் உயர்கல்வி மேற்கொண்டால், அவர்களுக்கு, 'புதுமைப்பெண்' திட்டம் மூலம், மாதம், 1,000 ரூபாய், சம்பந்தப்பட்ட மாணவிகளின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதில், 2024-25-ம் கல்வியாண்டில், இத்திட்டத்தின் கீழ், நாமக்கல்- டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின், மாணவியர், 292 பேருக்கு, 29 லட்சத்து, 61,000 ரூபாய் பெறப்பட்டுள்ளது. 'புதுமைப்பெண்' திட்டத்தில் பயனடைந்த டிரினிடி மகளிர் கல்லுாரி மாணவியருக்கு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கல்லுாரி தலைவர் நல்லுசாமி, செயலாளர் செல்வராஜ், செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், முதல்வர் லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், துணை முதல்வர் நவமணி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நோடல் அலுவலர் அனிதா, 'புதுமைப்பெண்' திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபியா, மதுக்கரைவேணி துறை பொறுப்பாசிரியைகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement