பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது பிறந்தநாள் விழா

மோகனுார் முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், வாகைப்பூ மன்னன், 16 போர்களில் வெற்றிப்பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின், 1,350வது பிறந்தநாள் சதய விழா, மோகனுாரில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா, பொருளாளர் அருள் அம்பலம், ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பெரும்பிடுகு முத்தரையரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, பத்தாம் வகுப்பு தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு, நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் ரெக்கையன், இளைஞரணி செயலாளர் மன்மதன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement