சாலை தடுப்பை சுக்கு நுாறாக்கிய பஸ்

பெங்களூரு: ஆம்னி பஸ் மோதியதில், சாலையில் உள்ள தடுப்புச் சுவர் சுக்கு நுாறானது.

திருப்பதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் பெங்களூரை நோக்கி ஆந்திர அரசு பஸ் வந்தது. கடைசி நிறுத்தமான மெஜஸ்டிக் பஸ் நிறுத்தத்தை நோக்கி நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

கே.ஆர்., சதுக்கம் வழியாக சென்ற பஸ், சிட்டி சிவில் நீதிமன்றம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடுவே உள்ள சிமென்ட் தடுப்புகளின் மீது மோதியது.

இதில், சிமென்ட் தடுப்புகள் சுக்கு நுாறானது. தடுப்புகளின் மீது பஸ் ஏறியதில், ஒரு புறமாக சாய்ந்தது. பஸ்சில் இருந்த பயணியர் அலறினர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பலத்த காயமோ ஏற்படவில்லை.

தகவல் அறிந்த ஹலசூரு கேட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement