'பயோ கெமிக்கல்ஸ்' உற்பத்தியில் ஒரு புதுமையான தீர்வு

பயோ கெமிக்கல்ஸ் அடிப்படையிலான ரசாயனங்களிலிருந்து பெறப்பட்ட பயோ பிளாஸ்டிக் மக்கும் பேக்கேஜிங் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை வழங்குகிறது.

அழகு சாதனப் பொருட்கள், ஆய்வகங்களில் புரதக் கண்டறிதல், சோப் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பான வகைகளில் ரொட்டி, பீர், சீஸ் மற்றும் சாறு உற்பத்தியில் நொதிகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பசைகள் உட்பட கட்டுமானப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது



தற்போது சந்தையில் இருக்கும் பயோ கெமிக்கல்ஸ் உற்பத்தி முறைகள் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு சிறிது கேடு விளைவிக்கும் வகையிலும், உற்பத்தி அளவுகள் குறைவாகவும், அதிகமான நீர் உபயோகம் கொண்டதாகவும், அதிக செலவுகள் பிடிக்க கூடியதாகவும் இருக்கிறது. இது பெரும்பாலும் லாபமற்ற பொருளாதாரத்துக்கு வழிவகுக்கிறது.

இயற்கை பிரித்தெடுத்தல் (natural extraction), வேதியியல் தொகுப்பு (chemical synthesis) மற்றும் நொதித்தல் (fermentation) ஆகியவற்றுக்கு விடை கொடுத்து சாத்தியமானதை செய்ய ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளது. பயோ டெக்னாலஜி தொழில்நுட்ப துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாக தனிப்பட்ட பராமரிப்பு, உணவு மற்றும் பானம் மற்றும் சிறப்பு ரசாயனத் தொழில்களுக்கு உயர் மதிப்புள்ள பயோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.

2023ல் ஹிதேஷ் ரபாலியாவால் நிறுவப்பட்ட செல்லரிம் லேப்ஸ் நாட்டின் முதல் செல்-ப்ரீ பயோ மேனுபேக்சரிங் பயோ கெமிக்கல்ஸ் உற்பத்தி தளத்தை உருவாக்குவதன் வாயிலாக இந்தியாவில் பயோ - கெமிக்கல்ஸ் உற்பத்தியில் ஒரு புதுமையை கொண்டு வந்திருக்கிறது. இந்த ஸ்டார்ட்அப் தனிப்பட்ட பராமரிப்பு, உணவு மற்றும் பானங்கள் மற்றும் சிறப்பு ரசாயனத் தொழில்களுக்கு உயர் மதிப்புள்ள உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்ய செயற்கை நுண்ணறிவு (AI) இன்ஜினியர்ட் என்ஸைசைம்களை பயன்படுத்துகிறது.

இது மிகவும் திறமையான அளவிடக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் நட்பு செயல்முறையைக் கொண்டிருப்பதாகக் கூறுப்படுகிறது. இது இந்த கம்பெனி குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடன் உயர்தர தயாரிப்புகளை வழங்க உதவுகிறது. வேகமான உற்பத்தி மற்றும் 90 சதவீத குறைந்த நீர் பயன்பாடு ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.

வாய்ப்புகள் எப்படி



அளவிடுதல் சிக்கல்கள், அதிக செலவுகள், குறைந்த யீல்ட் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பாரம்பரிய பயோ கெமிக்கல்ஸ் உற்பத்தியின் முக்கிய தடைகளை அகற்றுவதில் கவனம் செலுத்தி செல்லரிம் என்ற இந்த 'ஸ்டார்ட்அப்' கம்பெனி 15,72,500 கோடி ரூபாய் பயோ கெமிக்கல் சந்தையில் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளது.

இணையதளம் www.cellarim.com இ-மெயில் founders@cellarim.com

சந்தேகங்களுக்கு இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com அலைபேசி: 98204 51259

இணையதளம் www.startupandbusinessnews.com

-சேதுராமன் சாத்தப்பன்-

Advertisement