அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்

கரூர், கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டில், இளநிலை பாடப்பிரிவுகளில் சேர, www,tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த, 7 முதல் வரும், 27 வரை நடக்கிறது. இதையடுத்து, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட் டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பிக்கும் மாணவர்கள், இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தகவலை, கரூர் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement