பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் மக்கள் சிரமம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி விலக்கு ரோட்டில் சேதமடைந்த பயணியர் நிழற்குடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் --கமுதி ரோடு சித்திரக்குடி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ., உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.
இங்குள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வெயில், மழைக்காலங்களில் வேறு வழியின்றி மரத்தடியில் காத்திருக்கும் நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.தற்போதைய ஆட்சியில் பஸ்கள் நிற்காத இடங்களில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே சித்திரக்குடி அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைய விலக்கு ரோட்டில் உள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
-
போலீஸ் செய்திகள் தேனி