அகற்றப்படாத ஜல்லிக் கற்கள் பாதசாரிகள் பரிதவிப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் டெம்போ ஸ்டாண்ட் அருகே கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் டெம்போ ஸ்டாண்ட் உள்ளது. இதன் மேற்குப் பகுதியில் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் ஜல்லிக்கற்களை கொண்டு வந்து கொட்டினர்.
சீரமைப்பு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்த பின்பும் ரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லிக்குவியலை அள்ளி அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இப்பகுதியில் வங்கிகள், ஓட்டல்கள், மருந்து கடைகள் அதிகம் உள்ளன.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், ஜல்லி குவியல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களை இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு