வானில் பறந்த வண்ண விளக்குகள் ரூபி பீச்சில் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு

அரியாங்குப்பம் : ரூபி கடற்கரையில் நடந்த ஸ்கை லாந்தர் திருவிழாவில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வண்ணமயமான விளக்குகளை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ரூபி கடற்கரை 2 கி.மீ., பரந்து விரிந்துள்ளது. மணற்பாங்கான இந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க குளோ பெஸ்ட் 25 என்ற ஸ்கை லாந்தர் (வான விளக்கு) திருவிழாவை நேற்று இரவு 8:00 மணியளவில் நடத்தினர்.
ஸ்கை லாந்தர் விளக்குகளை சுற்றுலா பயணிகள் ஏற்றி வானில் பறக்கவிட்டு ஆர்ப்பரித்தனர். இரவு நேரங்களில், குறைந்த அளவு வெளிச்சத்தில், பறந்த லாந்தர் விளக்குகள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அந்த நேரத்தில் தரைக்காற்று கடலை நோக்கி வீசியதால், அந்த திசையை நோக்கி அனைத்து விளக்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக உயர எழும்பி பறந்தன. அசைந்தாடிய வான விளக்குகள் அங்கும் இங்கும் பறக்க சுற்றுலா பயணிகள் அதனை மொபைல் போன்களின் பதிவு செய்து குதுகலித்தனர். 3 நிமிடங்கள் மட்டும் காற்றில் பறந்து மீண்டும் கீழே விழுந்தன. இந்த நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
அமைச்சர், லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தினர்.
மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்