சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு

பழநி : திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமலை நாயகி அம்மன் கோயில், கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் மூலவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம்:கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி, செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் மூலவர், நந்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயில், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயில், நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயில், நவாமரத்துப்பட்டிபுதுார் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு