ஆபத்தான மின்பெட்டி சீரமைப்பு

வடமதுரை, : அய்யலுார் வைரபிள்ளைப்பட்டி ரோட்டோரம் தாழ்வாக திறந்த நிலையில் விபத்து ஆபத்தாக இருந்த மின்பெட்டி தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

இந்த ரோட்டில் ரோடு விளம்பில் இருக்கும் ஒரு மின்கம்பத்தில் எளிதாக சிறுவர்கள் தொட்டுவிடும் வகையில் தாழ்வாகவும், திறந்த நிலையிலும் மின்ஒயர்களுடன் மின்சார மீட்டர் பெட்டி இருந்தது. தினமலர் நாளிதழ் 'நாலு வரி நாலு படம்' பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆபத்தான மின்சார மீட்டர் பெட்டிக்கு பதிலாக கதவு கட்டமைப்புடன் பாதுகாப்பான மின்மீட்டர் பெட்டி அமைக்கப்பட்டது.

Advertisement