உலக மீட்பர் சர்ச் விழா துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வல்லமடை உலக மீட்பர் சர்ச் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் ராஜமாணிக்கம் திருப்பலி நிறைவேற்றி விழா கொடியேற்றினார். தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.

முக்கிய விழாவான தேர் பவனி விழா மே 30 இரவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஜூன் 1ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பாதிரியார், வல்லமடை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement