அங்கன்வாடி ஊழியர்களின் மகப்பேறு விடுப்பில் பாரபட்சத்தை களைய வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
விருதுநகர் : ''பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பாரபட்சத்தை களைய வேண்டும்,'' என தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.மகப்பேறு விடுப்பு வழங்குவதில் அரசின் பாரபட்சமான அணுகுமுறை குறித்து முன்பே கடிதம் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இக்கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு கடந்த 8ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித பதிலும் தெரவிக்கவில்லை. மத்திய அரசு பதில் அளிக்காததால் மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயரத்தி தர இயலாது என கூறுவது ஏற்புடையது அல்ல.
மகப்பேறு விடுப்பு வழங்குவது என்பது அரசின் உரிமை சார்ந்தது ஆகும். தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பாராமல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் ஊதியக்குழுவின் எல்லைக்குள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளனர்.
எனவே தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 21 பயனாளி குழந்தைகள் வருகை புரிய கூடிய மையங்களில் மட்டுமே நிரப்ப கூறியுள்ளனர். அனைத்து மையங்களிலுமே பற்றாக்குறை உள்ளது. இதிலும் பாரபட்சம் தேவையற்றது.
மேலும்காலிப்பணியிடங்கள் நிரப்ப கல்வி தகுதியை மாற்றியதை ஏற்க முடியாது. கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும், என்றார்.
மேலும்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு