பா.ஜ., தேசிய கொடி பேரணி

விழுப்புரம் : விழுப்புரத்தில் பா.ஜ., சார்பில், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தேசிய கொடி பேரணி நடந்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவம் மேற்கொண்ட சிந்துார் ஆப ரேஷன் வெற்றிக்கு போராடிய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தும் விதமாக, பா.ஜ., சார்பில் விழுப்புரத்தில் தேசிய கொடி பேரணி நடந்தது.
விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் துவங்கிய பேரணிக்கு, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சம்பத் துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், துணை தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பார்த்திபன், ராதாகிருஷ்ணன், முரளி, நகர தலைவர்கள் விஜயன், வனிதாசுதா, துணை தலைவர் வடிவேல்பழனி, சுகுமார், சரண்யா முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பொது மக்கள் கலந்துகொண்டு, 70 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியையும் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
திருச்சி சாலையில் புதிய பஸ் நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
மேலும்
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
-
போலீஸ் செய்திகள் தேனி