அரசு ஐ.டி.ஐ.,ல் சேர அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 2025ம் ஆண்டில் அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ., விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், திருச்சுழி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம், ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50. ஜூன் 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 04562 -252655/294382, 04566-2 25800, 04562 -290953, 73958 73907, 70100 40810 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement