மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஆத்துார் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 41 குடும்பத்தினர், இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத் தில் 41 குடும்பத்தினர் அளித்த மனு:
ஆத்துார் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 41 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
ஊராட்சி வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதியுடன் அரசு சலுகைகளுடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு பட்டா வழங்க கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
நாங்கள் வசிக்கும் இடம் குட்டை என கூறப்பட்டதால், பதிவேட்டில் நீர்நிலை புறம்போக்கு என உள்ளது. இதனால் பட்டா வழங்க முடியாது என தாலுகா அலுவலகத்தில் மறுக்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து தவறாக வகைப்பாடு செய்துள்ளதை மாற்றி பட்டா வழங்க வேண்டும்.
மேலும்
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
-
போலீஸ் செய்திகள் தேனி