நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் உயிரிழப்பு

புதுடில்லி: நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள கேபிள் கார் நிலையத்தின் கழிப்பறை அருகே இன்று 62 வயது இந்தியர் ஒருவர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேபிள் கார் நிலையத்தின் துணை பொது மேலாளர் உஜ்வால் செர்சான் கூறியதாவது:

காத்மாண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ தெற்கே உள்ள குரிந்தரில் உள்ள மனகாமனா கேபிள் கார் நிலையத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மன்னு பிரசாத் பட் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் உள்ளூர் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

சம்பவம் நடந்தபோது மன்னு பிரசாத் பட், அவரது மனைவி மற்றும் மருமகனுடன் கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகாமனா தேவி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது வடமேற்கு நேபாளத்தில் உள்ள உயரமான முஸ்டாங் பகுதிக்கு சென்று வந்ததால், ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

முக்திநாத்தில் பிரார்த்தனை செய்த பிறகு அவர் கேபிள் கார் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உஜ்வால் செர்சான் கூறினார்.

Advertisement