தோனி ஓய்வு எப்போது

ஆமதாபாத்: பிரிமியர் லீக் தொடரை சென்னை அணி வெற்றியுடன் நிறைவு செய்தது. இத்தொடருடன் சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை கேப்டன் தோனி 43, கூறுகையில்,''வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி முடிவு எடுக்க 4-5 மாதம் கால அவகாசம் உள்ளது. சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று, பைக் ஓட்டி உற்சாகமாக பொழுதை கழிக்க உள்ளேன். அதன் பின் ஓய்வு பற்றி முடிவு எடுப்பேன். இப்போதைக்கு ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை; மீண்டும் விளையாட வருகிறேன் என்றும் சொல்லவில்லை. முடிவு எடுக்க எனக்கு போதிய நேரம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உடலை 'பிட்' ஆக வைத்திருக்க முயற்சிக்கிறேன். செயல்பாட்டின் அடிப்படையில் ஓய்வு பெறுவது என்றால், பலர் 22 வயதில் ஓய்வு பெற வேண்டியிருக்கும். நல்ல உடற்தகுதியுடன் இருப்பது, கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம், அணிக்கு சிறந்த பங்களிப்பை கொடுப்பதே முக்கியம்.


வைபவ் சூர்யவன்ஷி 14, என் காலை தொட்டு ஆசி பெற்ற போது, வயதாகிவிட்டதை உணர்த்தினார். சென்னை அணியின் ஆன்ட்ரி சித்தார்த் 18, அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவரது வயதை கேட்ட போது, என்னைவிட 25 வயது குறைவாக இருந்தார். அப்போது தான் எனக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தேன்,''என்றார்.

Advertisement