வெளுத்து வாங்கிய கிளாசன்; கோல்கட்டா அணி தோல்வி

புதுடில்லி: பிரிமியர் லீக் போட்டியில் ஏமாற்றிய கோல்கட்டா அணி 110 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில், ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது நரைன் 'சுழலில்' அபிஷேக் (32) சிக்கினார். வருண் சக்ரவர்த்தி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹெட், நடப்பு சீசனில் 3வது அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்ஷித் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட கிளாசன், 17 பந்தில் அரைசதம் கடந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது நரைன் பந்தில் ஹெட் (76) அவுட்டானார். இஷான் கிஷான் (29) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கிளாசன், பிரிமியர் லீக் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்தது. கிளாசன் (105), அனிகேத் வர்மா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (31) ஆறுதல் தந்தார். குயின்டன் டி காக் (9), கேப்டன் அஜின்கியா ரகானே (15), அங்கிரிஷ் ரகுவன்ஷி (14) நிலைக்கவில்லை. ஹர்ஷ் துபே 'சுழலில்' ரிங்கு சிங் (9), ரசல் (0), ராமன்தீப் சிங் (13) சிக்கினர். கோல்கட்டா அணி 7 விக்கெட்டுக்கு, 110 ரன் எடுத்து திணறியது.
பின் இணைந்த மணிஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா ஜோடி ஓரளவு கைகொடுத்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது உனத்கட் பந்தில் மணிஷ் (37) அவுட்டானார். வைபவ் அரோரா (0) 'ரன்-அவுட்' ஆனார். எஷான் மலிங்கா பந்தில் ஹர்ஷித் (34) ஆட்டமிழந்தார். கோல்கட்டா அணி 18.4 ஓவரில் 168 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.
மேலும்
-
சந்தைக்கு வரத்து குறைவு வெற்றிலை விலை உயர்வு
-
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியில் மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்
-
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது
-
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
-
நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி
-
தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்