பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்

புதுச்சேரி : அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடபட்டது. அதில், 8 ஆயிரத்து 11 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை பெறப்பட்டன.

தொடர்ந்து, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் இன்று (26ம் தேதி) அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.

அதில், காலியாக இருக்கும் இடங்களுக்கு மறுநாள் 27 ம் தேதிஅரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கொண்டு, தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, 28 ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.

அதிலும் நிரம்பாத இடங்கள், 29ம் தேதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். வரும் 2ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement