ரயில் நிலையத்தில் துாய்மை பணி

விழுப்புரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் துாய்மை பணி நடந்தது.
தென்னக ரயில்வே திருச்சி மண்டலம் சார்பில், கடந்த 22ம் தேதி முதல் வரும் ஜூன் 5ம் தேதி வரை உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் படுகிறது.
இதையொட்டி, விழுப்புரத்தில் ரயில்வே அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலைய வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துாய்மை பணி நேற்று நடந்தது.
ரயில் நிலைய வளாகம், அலுவலகம், குடியிருப்பு பகுதியில் கிடந்த மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து அப்புறப்படுத்தினர்.
துாய்மை பணி பொன்மலை ரயில்வே மருத்துவமனை உதவி சுகாதார அதிகாரி ரஞ்சித்குமார் தலைமையில், விழுப்புரம் ரயில்வே காலனி சுகாதார ஆய்வாளர் ரேஷ்மா, ரயில் நிலையம் சுகாதார ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement