கோவில் திருவிழாவில் தகராறு இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை: குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்-தவர் மணிகண்டன், 31; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள், கடந்த, 24ல் பஞ்சப்பட்டி பாம்பலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மாவிளக்கு எடுத்துக்கொண்டு, மின்வாரிய அலுவலகம் வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, தாதம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், 24, மணிகண்டன், 28, கன்னியப்பன், 25, சந்துரு, 24, ஐயப்பன், 28, மற்றும் சிலர், மாவிளக்கு எடுத்து சென்றவர்களை கேலி, கிண்டல் பேசியுள்-ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில், தாதம்பட்டியை சேர்ந்த-வர்கள் தாக்கியதில், மணிகண்டன் மற்றும் அவரது அண்ணி அபி-நயா, 28, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். லாலாப்பேட்டை போலீசார், இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement