சிறுதானிய விளைச்சலை பெருக்க ரூ.28 லட்சம் ஒதுக்கீடு 

சிவகங்கை: சிவகங்கையில் சிறுதானிய விளைச்சலை பெருக்கிட அரசு ரூ.28 லட்சம் ஒதுக்கியுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிறுதானியங்களான ராகி, குதிரைவாலி விதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படும். சிறுதானிய குழு (4 குழு) அமைக்க ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது. சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு சிறுதானிய தொகுப்பு செயல்விளக்க திடல் 450 எக்டேரில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் விதை, நுண்ணுாட்டகலவை, உயிர் உரம், உயிரியல் காரணிகள், இயற்கை இடுபொருள், அறுவடை மானியம் ஆகிய அடங்கிய தொகுப்பில் ஒரு எக்டேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அட்மா திட்டத்தில் சிறுதானிய குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுதானிய பெண் உழவர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.

Advertisement