குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ்காரர் சுட்டுக்கொலை


காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் காதிர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், காஜியாபாதில் உள்ள ஒரு கிராமத்தில் காதிர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.



அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த அவரது கூட்டாளிகள், போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில், கான்ஸ்டபிள் சவுரப் குமார் தேஷ்வால் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சில போலீசார் காயமடைந்தனர். தப்பியோடிய கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement