கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா

புதுச்சேரி : புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, வரும் 1ம் தேதி காலை 8:00 மணிக்கு தேவதா அனுக்ஞை யஐமான அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மாலை 6:00 மணிக்கு ரஹோர்கண ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

2ம் தேதி காலை 9:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், மிருச்சாங்கிரஹணம் மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேசபலி நடக்கிறது. 3ம் தேதி காலை 8:00 மணிக்கு மூர்த்தி ஹோமம், ஸம்ஹீதா ஹோமம், திசா ஹோமம், சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

4ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, விசேஷசந்தி, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதிகள் பூஜை, சுமங்கலி பூஜை, பீம்பசுத்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மாகா பூர்ணாஹூதி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 5ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, காலை 7:45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 8:00 மணிக்கு கெங்கை மாரியம்மன் விமான மகா கும்பாபிேஷகம், 8:15 மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகர் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிேஷகம், 8:30 மணிக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு விசேஷ புஷ்பங்கள் மற்றும் மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விஸ்வநாதன், திருப்பணிக்குழு தலைவர் இளையபெருமாள் தலைமையில் அறக்காவலர் குழுவினர், திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement