தேசிய அளவில் ரெட்கிராஸ் போட்டி ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை

ராமநாதபுரம் : ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கான கற்றல், தலைமை பண்பு, கலைநிகழ்ச்சி போட்டிகளில் ராமநாதபுரம் அணியினர் முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான தேசிய அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கான கற்றல் மற்றும் தலைமை பண்பு குறித்த பயிற்சி முகாம் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் மார்ச் 24 முதல் 28 வரை நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் பங்கேற்றனர்.

அங்கு தேசிய அளவிலான கற்றல், தலைமை பண்பு, கலைநிகழ்ச்சிகள், கலாச்சார போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் அணியினர் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர்.

மாணவர்களுக்கான பாராட்டு விழா ராமநாதபுரத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நாராயணன் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.------

Advertisement